Latestமலேசியா

PD கடல் சிப்பிகளில் biotoxin நச்சு அபாய அளவுக்குக் கீழ் குறைந்தது; விரைவில் நல்ல முடிவு ?

சிரம்பான், மே-21, போர்டிக்சன் கரையோப் பகுதிகளில் கிடைக்கும் சிப்பிகளில் biotoxin எனப்படும் உயிர் நச்சு அமிலத்தின் அளவு, அபாய அளவுக்குக் கீழ் குறைந்திருக்கிறது.

அபாய அளவு 800ppb என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், ஆகக் கடைசியாக சிப்பி மாதிரிகள் ஆய்வுக் கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த biotoxin அளவு 498 ppb- ச்சாகக் குறைந்துள்ளது.

விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவினத்துக்குப் பொறுப்பான நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri Jalaluddin Alias அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

போர்டிக்சன் கடல்பகுதியில் இருந்து எடுக்கப்படும் சிப்பிகளில் biotoxin நச்சளவு அதிகமாக இருப்பதால், lala, lokan, kerang உள்ளிட்ட சிப்பி வகைகளை எடுப்பதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டதில் இருந்து, அங்கிருந்து எட்டாவது முறையாக சிப்பிகளின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

எனினும், சிப்பிகளைச் சேகரிப்பதை மீண்டும் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, இன்னொரு சுற்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாநில மீன்வளத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக Jalaluddin கூறினார்.

Biotoxin நச்சு அபாய அளவில் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, PD கடல் சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானவை அல்ல என முடிவுச் செய்யப்பட்டு ஏப்ரல் 4-ங்காம் தேதி தடை விதிக்கப்பட்டது.

போர்டிக்சன் கடல்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சிப்பிகளை உட்கொண்டவர்களில் 8 பேர் உடல் உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பிறகே, அவற்றில் biotoxin நச்சு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!