Latestமலேசியா

Public Mutual நிறுவனம் 7 நிதிகளுக்கு RM88 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வருமானப் பங்கீட்டை அறிவித்தது

கோலாலாம்பூர், ஆகஸ்ட்-4 – பப்ளிக் வங்கியின் துணை நிறுவனமான Public Mutual, ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான தனது 7 நிதிகளுக்கு மொத்தம் 88 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வருமானப் பங்கீட்டை அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக, Public Islamic Select Bond Fund ஒரு யூனிட்டுக்கு 3.75 சென் வருமானப் பங்கீட்டை வழங்குகிறது.

அதே சமயம், Public Islamic Income Fund மற்றும் Public e-Income Fund ஆகிய இரண்டும் ஒரு யூனிட்டுக்கு 3.50 சென்னும், Public Bond Fund 3.70 சென்னும் அறிவித்துள்ளன.

மேலும், Public e-Islamic Income Fund ஒரு யூனிட்டுக்கு 3.00 சென் வழங்குகிறது.

இவ்வேளையில் பங்குரிமை நிதிகளில், Public Optimal Growth Fund 0.35 சென்னும், Public Far-East Property & Resorts Fund 0.20 சென்னும் அறிவித்துள்ளன.

மலேசியாவின் மிகப்பெரிய தனியார் அறங்காப்பு நிறுவனமான Public Mutual, நாடு முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நிதிகளை நிர்வகித்து வருகிறது.

முதலீட்டாளர்கள் முழுமையான விவரங்களை இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சரிபார்க்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!