Latestமலேசியா

RM 500.000 ரிங்கிட் ரொக்க தொகையுடன் பேக்கை கைவிட்டுச் சென்ற உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டனர்

கோலாலம்பூர். ஏப் 7 – RM 500.000 ரிங்கிட் தொகையுடன் கொண்ட பேக்கை கடந்த மாதம் டமன்சாராவிலுள்ள வர்த்தக வளாகத்தில் கைவிட்டுச் சென்ற அதன் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்திருக்கிறார்.

அந்த வர்ததக வளாகத்தில் சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான பணம் இருந்த பேக்கை பெற்றுக்கொள்ள வந்தபோது அந்த ஆடவரின் வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் கூறினார். சி.சி.டி.வியில் பதிவான காட்சி மற்றும் இதர தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட சாட்சியத்தின்படி அந்த பணப்பெட்டியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டதாக ஹுசைன் உமர் கான் கூறினார்.

மேலும் அந்த பணப்பெட்டியில் இருந்த இதர ஏழு கைரேகைகளையயும் நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் கூறினார். அதே வேளையில் அந்த பணத்தின் மீது உரிமை கோரியிருக்கும் அந்த ஆடவரின் தகவலை உறுதிப்படுத்த மேலும் சில சாட்சிகளை அழைப்பதற்கான விசாரணையையும் போலீஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அந்த பணப்பெட்டியிலிருந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற தகவலை அறிந்துகொள்ளும் அம்சமும் இதில் அடங்கும்.

விசாரணை முடிவடைந்தபின்னர் அந்த பணத்தைக் கொண்ட பேக் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். விசாரணை அறிக்கை தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் அனுமதியை பெறவேண்டும் . பணம் இருந்த பேக்கின் உரிமையாளர் தொடர்பில் விசாரணையில் முழுமையான திருப்தி அடைந்த பின்னரே அந்த பேக் அதன் உரியையாளரிடம் ஒப்படைக்கப்படும் என ஹுசைன் உமர் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டமன்சாரா வர்த்தக வளாகத்தில் RM500,000 ரிங்கிட் இருந்த பெட்டி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்ட மறுநாளான மார்ச் 29 ஆம்தேதி அந்த பெட்டி மற்றும் அதிலிருந்த பணம் தம்முடையது என நிறுவனத்தின் இயக்குனர் போலீசிடம் தொடர்பு கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!