கோலாலம்பூர், ஜூன் 17 -25 பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான லஞ்சப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி ( Azam Baki ) தெரிவித்திருக்கிறார். குத்தகை திட்டங்கள் , திருடப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற்றது, லஞ்ச ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர்களிடமிருந்து பறிமுல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஆகியவற்றின் மூலம் 87 பில்லியன் ரிங்கிட் பாதுகாக்கப்பட்டதாக அவர் கூறினார். 1 MDB பெர்ஹாட்டிடமிருந்து 70 விழுக்காடு அதாவது கிட்டத்தட்ட 29 பில்லியன் ரிங்கிட் திருடப்பட்ட சொத்துக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருமான வரி வாரியம், மலேசிய நிறுவனங்கள் ஆணையம் மற்றும் பேங்க் நெகாரா மூலம் இதர நிபுணத்துவ தகவல்களை பெறுவதில் MACC ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாகவும் Azam Baki கூறினார். நாங்கள் வருமான வரி வசூலிப்பாளர்கள் அல்ல. நாட்டின் நலனுக்காக அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு லஞ்ச ஊழல் மற்றும் அதிகார மீறல் விவகாரங்களை கண்காணித்து வருகிறோம் என அசாம் பாக்கி தெரிவித்தார். உதாரணத்திற்கு கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் குற்றஞ்சாட்டுவோம் என்பதோடு கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றும் அவர் விவரித்தார்.