
ஷா ஆலாம், ஆகஸ்ட்-2 – கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம் குறித்து வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அமுலாக்க அதிகாரிகள் விதிகளை மீறியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஙா கோர் மிங் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, விலங்குகள் வதைக்கப்படுவதை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது என சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிக்கின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்ற அதிகாரிகள் உட்பட யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், விலங்கு நலச் சட்டத்தின் கீழ் தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸாரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வைரலான இவ்விவகாரம் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், #JusticeForRocky என்ற hashtag-கை trending செய்து கடுமையான நடவடிக்கைக்கு வலைத்தளவாசிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.



