Latestமலேசியா

RON95 இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் ; குறுகிய காலத்தில் செயல்படுத்தப்படாது – பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 2 – RON95 இலக்கிடப்பட்ட மானியம் தொடர்பான கொள்கை அறிக்கை எதுவும், இதுவரை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்திட்டம், குறுகிய காலத்தில் செயல்படுத்தப்படாது எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

RON95 இலக்கிடப்பட்ட உதவித் திட்டம் குறித்து நீண்ட காலமாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், தற்போதைக்கு அதனை அமல்படுத்துவதை காட்டிலும், இலக்கிடப்பட்ட டீசல் மற்றும் மின்சார மானியங்களை கண்காணிப்பது நல்லது என அரசாங்கம் கருதுவதாக, பிரதமர் சொன்னார்.

அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், மக்களின் கருத்துகள் ஆகியவற்றை கண்டறிந்த பின்னரே, RON95 இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா? என்பது ஆராயப்படுமென பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

RON95 இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதா என பாசிர் கூடாங் பெரிக்காதான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் பட்லி ஷாரி (Ahmad Fadhli Shaari) முன் வைத்த கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!