Latestமலேசியா

SST அதிகரிப்பிலிருந்து 300 கோடி ரிங்கிட் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது ; கூறுகிறார் அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 26 – இம்மாதம் முதலாம் தேதி, SST விற்பனை சேவை வரி, ஆறு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் கூடுதலாக சுமார் 300 கோடி ரிங்கிட் வருவாய் ஈட்டக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், SST அதிகரிப்பு, பணவீக்கத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இம்மாதம் முதலாம் தேதி தொடங்கி, நேரடி சேவை மற்றும் பொதுமக்களின் ஈடுபாடு காணப்படும் வணிக நடவடிக்கைகளை மையமாக கொண்டு SST வரி உயர்த்தப்பட்டது.

எனினும், உணவு, பானம், தொலைத்தொடர்பு கட்டணங்கள் உட்பட தண்ணீர், பெட்ரோல் போன்ற பயன்பாட்டுக்கான வரி அதில் உட்படுத்தப்படவில்லை.

SST விற்பபை சேவை வரி உயர்வால், மக்களின் வாழ்க்கை செலவினம், உற்பத்தி செலவினம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா என மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, நிதி அமைச்சருமான அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!