Latestமலேசியா

Grasshopper கிண்ண ஸ்குவாஷ் இறுதியாட்டத்திற்குள் நுழைந்த சிவசங்கரி: முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அபாரம்

சூரிக், ஏப்ரல்-26-சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில் நடைபெற்று வரும் Grasshopper கிண்ண ஸ்குவாஷ் போட்டியில், தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி இறுதியாட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், போட்டியின் முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் அமினா ஓர்ஃபியை (Amina Orfi) வீழ்த்தி சிவசங்கரி இந்த வெற்றியைப் பதிவுச் செய்தார்.

81 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், தொடக்கத்தில் பின்தங்கியிருந்த போதிலும், விடாமல் போராடி 11-7, 5-11, 8-11, 11-9, 11-5 என்ற 5 செட் கணக்கில் சிவசங்கரி வெற்றி பெற்றார்.

இதையடுத்து இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் ஜப்பானின் சத்தோமி வாத்தனாபே-வை (Satomi Watanabe) எதிர்கொள்கிறார்.

கடந்தாண்டு இத்தொடரில் இரண்டாம் இடம் பிடித்த சிவசங்கரி, இம்முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளார்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!