
கோலாலம்பூர், அக்டோபர் 28 – தீபாவளியை முன்னிட்டு, Servis Ihsan MADANI திட்டத்தின் கீழ் PETRONAS AutoExpert மையங்களில் வாகனப் பராமரிப்புக்கு 70 ரிங்கிட் வரை மானியம் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN, PETRONAS நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் இந்தச் சலுகை, 2026 அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை நடைமுறையில் இருக்கும்.
இத்திட்டத்தில் 18 அம்ச வாகனப் பரிசோதனை, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை மற்றும் அசல் PETRONAS மசகு எண்ணெய் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
மலேசியக் குடிமக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். வாகனம் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், செல்லுபடியாகும் சாலை வரியையும் கொண்டிருக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் சேவைத் தொகுப்பின் நிபந்தனைகளுக்கு ஏற்ப சலுகை வழங்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர், Setel செயலியைப் பதிவிறக்கம் செய்து, ‘Car Service’ பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், திட்டத்தில் பங்கேற்கும் PETRONAS AutoExpert மையத்தைத் தேர்ந்தெடுத்து, ‘Book an Appointment’ வழியாக முன்பதிவு செய்யலாம்.
அதில் Servis Ihsan MADANI சேவைத் தொகுப்பைத் தேர்வு செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். முன்பதிவை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட மையம் ஒன்று முதல் இரண்டு வேலை நாட்களுக்குள் தொடர்புகொள்ளும்.
சலுகைக் காலத்திற்குள் சேவையைப் பெறுவதுடன், முன்பதிவின்போது பொருந்தக்கூடிய கட்டணம் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்த்துக்கொள்ளவும்.



