Latestஉலகம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny-யின் நல்லடக்க சடங்கில் அரசாங்கத்தின் எச்சரிகையும் மீறி பலர் பங்கேற்பு

மாஸ்கோ, மார்ச் 2 – சிறையில் மரணம் அடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ‘Alexei Navalny’ யின் நல்லடக்கச் சடங்கில் அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி பலர் கலந்துகொண்டனர்.

இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பலர் அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபட்டிருப்பது குறித்தும் எதிர்ப்பு கோஷங்களை வெளிப்படுத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘Alexei Navalny’ அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அதிகமான போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருந்தபோதிலும் அந்த 47 வயதுடைய தலைவரின் இறுதி சடங்கில் எச்சரிக்கையும் மீறி அவரது ஆதரவாளர்களில் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பிப்ரவரி 16ஆம் தேதியன்று ரஷ்யாவின் ‘Artic’ சிறையில் ‘Navalny’ இறந்தார். அவரது மரணத்திற்கு ரஷ்ய அதிபர் ‘Vladimir Putin’ காரணம் அல்லது பொறுப்பு என மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!