
கோலாலம்பூர், நவம்பர் 16 – செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் மலேசியாவுக்கு ஐந்து முக்கிய அச்சுறுத்தல்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவற்றில் போலியான படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்குதல் (Deepfake), இணையவழித் தாக்குதல்கள், அல்காரிதம் (Algorithm) சார்ந்த பாரபட்சம், தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மீறல் மற்றும் உருவாக்கும் AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவை அடங்கும்.
தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) தெரிவித்ததாவது, AI பயன்பாட்டில் மனிதர்களின் கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் பொறுப்புடைமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், மலேசியாவில் AI பயன்பாட்டுக்கென தனிச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதற்கான AI நிர்வாக மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், AI பயன்பாட்டுக்கு 16 வயது குறைந்தபட்ச வயது வரம்பு விதிப்பது குறித்து தற்போது முடிவு செய்யப்படவில்லை. அதேவேளை, பள்ளி மாணவர்களிடையே AI தொடர்பான அறிவு, பாதுகாப்பு மற்றும் நெறிமுறையான பயன்பாட்டை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.



