Latestமலேசியா

நஜீப்பின் அரச மன்னிப்பு விவகாரத்தில் அம்னோவை ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும்? விக்னேஸ்வரன் கேள்வி

மலாக்கா, நவம்பர்-13,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் அரச மன்னிப்பு விவகாரத்தில், அம்னோ மற்றும் தேசிய முன்னணியையும் அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியையும் ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும் என ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச மன்னிப்பு வழங்குவது மாமன்னரின் தனிப்பட்ட அரசியலமைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நஜீப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால், மன்னிப்பு தொடர்பான முடிவை நிர்ணயிக்கும் அதிகாரம் அம்னோவுக்கு இருப்பதாக அர்த்தமில்லை என்றார் அவர்.

2018-ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் வலியுறுத்தியதையும் விக்னேஸ்வரன் இவ்வேளையில் நினைவுகூர்ந்தார்.

எனவே, அரச மன்னிப்பு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒரே கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை நிறுத்திவிட்டு, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவினம் மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்துமாறும் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!