Latestஉலகம்

விண்வெளிக்கு விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் – புகைப்படம் வைரல்

ஃபுளோரிடா, மார்ச்-21 – 9 மாதங்களுக்கு முன் அனைத்துலக விண்வெளி நிலையம் சென்ற போது சுனிதா வில்லியம்ஸ், தன்னுடன் விநாயகர் சிலையையும் எடுத்துச் சென்றதாக ஏற்கனவே அவரின் உறவினர் ஒருவர் கூறியிருந்தது தெரிந்ததே.

இந்நிலையில், விண்வெளி பயணத்தில் சுனிதா சுமந்து சென்றதாகக் கூறப்படும் விநாயகர் சிலையின் புகைப்படம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில் விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை நிலையில் மிதக்கும் விநாயகர் சிலையின் மரச் சிற்பத்தைக் காண முடிகிறது.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் மற்றும் விண்வெளித் திட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் பகவத் கீதை புத்தகம் மற்றும் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

இயல்பிலேயே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரான சுனிதா, தனது குடும்ப வம்சாவளியிலிருந்து வரும் வலுவான இந்து வேர்களை பெருமைமிகு அடையாளமாகக் கருதுபவர் என்றும் கூறப்படுகிறது.

9 மாதங்களாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதாவும் இதர மூவரும் சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பாக பூமி திரும்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!