
சென்னை, மே-11 – ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்களில் நடித்தவரான சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்.
4-ங்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருப்பவர் சூப்பர் குட் சுப்பிரமணி.
சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தில் பணியாற்றியதால், சூப்பர் குட் என்ற அடைமொழி இவரின் பெயருடன் ஒட்டிக் கொண்டது.
முண்டாசுப்பட்டி, மகாராஜா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்டவை இவர் நடித்த மற்ற பிரபல படங்களாகும்.