Latestமலேசியா

SPM 2026 எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

புத்ராஜெயா, நவ.23-ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான 2026ஆம் ஆண்டு SPM எழுத்துத் தேர்வுகள் இன்று காலை 9 மணிக்கு மலாய் மொழி செவிவழித் தேர்வுடன் தொடங்கின.

புத்ராஜெயா Presint 16(1) தேசிய இடைநிலைப் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கே மாணவர்கள் வரத் தொடங்கி விட்டனர். தேர்வுக்கான இறுதித் தயாரிப்புகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு பெற்றோரும் ஊக்கமளித்து ஆதரவளித்தனர்.

அப்பள்ளியில் தேர்வு ஏற்பாடுகள் அதிகாலையிலேயே தொடங்கின. காலை 6.30 மணிக்கு முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளர் பாதுகாப்பு அறையிலிருந்து வினாத்தாள்களை எடுத்துச் சென்றார். தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 8.30 மணிக்குள் வந்து விட வேண்டும் எனவும் 8.50 மணிக்கு தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 3,334 தேர்வு மையங்களில் மொத்தம் 4,20,879 மாணவர்கள் இவ்வாண்டுக்கான SPM தேர்வை எழுதப் பதிவு செய்துள்ளனர். எழுத்துத் தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!