Latestமலேசியா

அரசாங்கத்தின் ஊழல் தடுப்பு முற்சிக்கு வலுசேர்க்க சிறப்பு குழு உறுப்பினர்களாக ஐவர் நியமனம்

கோலாலம்பூர், நவ 29 – அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதற்காக, அது தொடர்பான சிறப்புக் குழுவுக்கு மேலும் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனம் மடானி அரசாங்கத்தின் ஊழலை துடைத்தொழிக்கும் முயற்சிக்கு ஆக்கப்பூர்வமாக இருக்கும என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி 2026ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி வரை அந்த புதிய உறுப்பினர்கள் சிறப்புக் குழுவில் பணியாற்றுவார்கள் என அவர் கூறினார்.

மேலவைத் தலைவர் டான் ஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் இந்த சிறப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வேளையில் பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டத்தோ முகமட் ஷஹர் அப்துல்லா, பதாங் லுபார் நாடாளுமன்ற உறுப்பினர்முகமட் ஷஃபிஸான் கெப்லி, தாவாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லோ சூ ஃபூய், பெந்தொங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மான் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஊழல் துடைத்தொழிப்பு தொடர்பான விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காக அந்த சிறப்புக்குழு உறுப்பினர்களை மாட்சிமை தங்கிய பேரரசர் நியமித்துள்ளார். நேற்று அவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!