Latestமலேசியா

Taylor Switch இசை நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பை மலேசியா தவற விட்டதா? துணை அமைச்சர் மறுப்பு

கோலாலம்பூர், மார்ச்-8, உலகப் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகி Taylor Swift-டின் கலைநிகழ்ச்சி இந்நாட்டில் நடைபெறாமல் போயிருப்பதால், மலேசியா மிகப் பெரிய பொருளாதார வாய்ப்பை இழந்திருப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்திருக்கிறது.

உண்மையில் அக்கலை நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் வாய்ப்பெதுவும் நமக்கு கொடுக்கப்படவே இல்லை என இளைஞர்- விளையாட்டுத் துறை துணை அமைச்சர் அடாம் அட்லி சொன்னார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிகழ்வு மேலாண்மை நிறுவனமான ASM Global-லுடன் மலேசியா செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அப்படி எந்த ரத்துகளும் இல்லை என்றார் அவர்.

ASM Global நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் மலேசியாவுக்கு கூடுதல் வாய்ப்பு இருந்தும், Taylor Switdt-டின் இசைநிகழ்ச்சி வேறு நாட்டிடம் கைமாற விட்டிருக்கக் கூடாது என மக்களவையில் எழுப்பப்பட்ட பிரச்னைக்கு துணை அமைச்சர் பதிலளித்தார்.

அனைத்துலகக் கலைஞரின் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பை நழுவ விட்டிருப்பதன் மூலம் மலேசியா பொருளாதார ரீதியில் பெரும் வாய்ப்பை இழந்திருப்பதாகக் கூறி பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஃபாய்சால் அசுமு நேற்று முன்தினம் அப்பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

உலகளவிலான தனது இசைநிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக தென்கிழக்கு ஆசியாவுக்கு வரும் Taylor Swift, இவ்வட்டாரத்தில் சிங்கப்பூரில் மட்டுமே அதனை நடத்துவதற்கு அக்குடியரசு அவருக்கு குறிப்பிட்ட தொகையைச் சன்மானமாகக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அச்சன்மானம், சிங்கப்பூரை ‘விளம்பரப்படுத்தும்’ நடவடிக்கையே ஒழிய, அண்டை நாடுகளுக்கு எரிச்சல் தரும் நோக்கத்தைக் கொண்டதல்ல என சிங்கைப் பிரதமர் லீ சியென் லூங் தெளிவுப்படுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!