Latestஉலகம்

Whooping Cough: உலகளவில் அதிவேகத்தில் பரவுகிறது கக்குவான் இருமல் தொற்றுநோய்

பெய்ஜிங், ஏப்ரல் 12 – கடந்த 2019ஆம் ஆண்டு உலக நாடுகளுக்குக் கொரோனாவை பரிசளித்த சீனா, தற்போது அடுத்தடுத்த தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தற்போது சீனாவில் whooping cough எனப்படும் கக்குவான் இருமல் அதிகளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 13 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் பரவி வந்த கக்குவான் இருமல், மொத்தமாக 32,380 பேர் வரை பாதித்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம்.

இந்த நோய் சீனாவில் மட்டுமல்லாது பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ்சில் மொத்தமாகக் கக்குவான் இருமலுக்கு 54 பேர் பலியாக இருப்பதாகவும், இது கடந்த ஆண்டை விட 34 மடங்கு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கக்குவான் இருமல் என்பது Bordetella Pertussis என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயாகும். இந்த தொற்றுநோய் நுரையீரலின் மேல்பகுதியை நேரடியாகப் பாதித்து, மூச்சுக் குழாயில் வீக்கத்தை ஏற்படுத்தி நச்சுக்களை வெளியிடும்.

இதன் அறிகுறியாக ஜலதோஷம், மூக்கடைப்பு, காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்பட்டு படிப்படியாக அவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகள்தான் அதிகம் இந்நோய்யால் பாதிக்கப்படுகின்றனர். பதின்பருவத்தினர்களுக்கும், பெரியவர்களுக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன.

இதனிடையே, இருமல் துவங்குவதற்கு முன், நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், ‘antibiotic’ அல்லது தடுப்பூசிகள் வாயிலாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!