
பெட்டாலிங் ஜெயா, செப்-18-புதிய iPhone 18 Pro-வை வாங்க, நாடு முழுவதும் உள்ள Apple Store மையங்களில் அதிகாலை 4 மணி முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதிகாலை 4 மணிக்கே மக்கள் கடைகளுக்கு வெளியே வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர் என @fizabarakahtripkashmir என்ற பயனர் பகிர்ந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இணையவாசி TRX-இல் உள்ள Apple Store-க்கு வெளியே காலை 5.50 மணிக்கு காணப்பட்ட நீண்ட வரிசையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
புதிய iPhone 18 Pro-வை வாங்க பல்வேறு Apple Store கிளைகளுக்கு வெளியே பெரும் கூட்டம் காணப்பட்டதாக சமூக வலைத்தளப் பதிவுகளும் பகிரப்பட்டுள்ளன.
விடியும் முன்பே மக்கள் வரிசையில் காத்திருந்தது பல சமூக வலைத்தளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்த ஆர்வம் குறித்து நகைச்சுவையாக கருத்துகளையும் பதிவிட்டனர்.
“பணக்காரர்கள், சிறுநீரகத்தை விற்ற பணமா காரணம்?” என்றும் “அற்புதம்… உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே!” என்றும் ஊடகவாசிகள் தங்கள் கருத்துகளைப் பதிவேற்றியுள்ளனர்.
இதனிடையே, iPhone 18 Pro-வை வாங்குவதற்காக அதிகாலையிலேயே திரண்ட Apple ரசிகர்களின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.



