
வாஷிங்டன், ஏப்ரல்-29-அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, முதல் முறையாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய limited edition சிறப்பு கடப்பிதழ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வரும் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவுள்ள அந்த 250-ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கடப்பிதழின் உள் பக்கத்தில், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் மேல் அதிபர் ட்ரம்ப்பின் முகம் பதிக்கப்பட்டிருக்கும்.
மேலும், அவரது கையெழுத்து தங்க முலாம் பூசப்பட்ட எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 25,000 முதல் 30,000 வரை மட்டுமே அச்சிடப்படவுள்ள இந்த கடப்பிதழ்கள், வரும் ஜூலை மாதம் முதல் வாஷிங்டனில் நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்படும்.
ஒரு நினைவாக வெளியிடப்பட்டாலும், வழக்கமான கடப்பிதழ்களில் உள்ள அதே உச்சக் கட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த சிறப்பு ‘ட்ரம்ப் கடப்பிதழ்களிலும்’ இருக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இது வரை வேறெந்த அதிபரும் இவ்வாறு தனிப்பட்ட விளம்பர அணுகுமுறையை கையாண்டதில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.



