Latestமலேசியா

ஆபத்தான பாதரசம் கண்டறியப்பட்டது: ‘GB Daily Glow Skin Cream’ விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை

புத்ராஜெயா, அக்டோபர்-2,GB Daily Glow Skin Cream எனும் அழகுசாதனப் பொருளில் நச்சுத்தன்மை வாய்ந்த பாதரசம் (Mercury) கலந்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விற்பனைக்கு சுகாதார அமைச்சு அதிரடித் தடை விதித்துள்ளது.

​அந்தப் பொருளுக்கான அங்கீகாரப் பதிவை உடனடியாக இரத்துச் செய்துள்ளதாக KKM அறிவித்துள்ளது.

​பாதரசம், சருமத்தின் வழியே உடலுக்குள் ஊடுருவி, சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பெருமளவில் பாதிக்கும் ஆபத்து கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதோடு, கருவில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மூளை வளர்ச்சியை இது கடுமையாகப் பாதிக்கும்; தவிர, தீவிர தோல் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.

எனவே, ​பொது மக்கள் இந்தக் கிரீமைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், ஏதேனும் பாதிப்புகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

​இத்தடையை மீறி அந்தப் பொருளை விற்கும் நபர்களுக்கு 25,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதுவே நிறுவனங்கள் என்றால், முதல் குற்றத்திற்கு தலா 50,000 ரிங்கிட் வரையிலும், மீண்டும் மீண்டும் என்றால் 100,000 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!