Latestஇந்தியாஉலகம்

இந்திய அரசின் எஃகு ஆலையில் வெடிப்பு; 8 தொழிலாளர்கள் பலி

இந்தியா, ஜூன்-9-இந்தியா ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருக்கும் விசாகப்பட்டினத்திலுள்ள அரசுக்கு சொந்தமான எஃகு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

சூடான உருக்கு எஃகை வெளியேற்றுவதற்காக கதவு திறக்கப்பட்டபோது திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு தீ வேகமாக பரவியது என்று இந்திய எஃகு அமைச்சசு தெரிவித்துள்ளது.

இந்த எஃகு ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 7.3 மில்லியன் டன் ஆகும்.

கடந்த ஆண்டு, ஆலையின் நிதி மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்த இந்திய அரசு 114.4 பில்லியன் ரூபாய் மதிப்பிலான மீட்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!