Latestமலேசியா

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு ‘e-Arrival Card’ கட்டாயம்

புது டெல்லி, ஏப்ரல்-23-இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் மலேசியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

அந்நாட்டுக்குள் நுழையும் அனைத்து மலேசியக் குடிமக்களும் இனி e-Arrival Card எனும் மின்னியல் வருகை அட்டையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையம் இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

​இந்த விதிமுறை சாதாரண மலேசியக் குடிமக்கள் மட்டுமின்றி, இந்திய வம்சாவளி அட்டையான OCI வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

​பயணிகள் தங்களது பயணத்திற்கு குறைந்தது 72 மணி நேரங்களுக்கு முன்பாக, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான indianvisaonline.gov.in மூலம் இந்த e-Arrival அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

​இந்த மின்னியல் அட்டையானது, உங்களது விசா மற்றும் கடப்பிதழ் தவிர்த்து கூடுதலாகத் தேவைப்படும் ஆவணமாகும்.

எனவே, இதன் நகலைத் டிஜிட்டல் வடிவிலோ அல்லது அச்சு வடிவிலோ கையில் வைத்திருக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

​விமான நிலையத்தில் சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

மேல் தகவல்களுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தைப் பார்க்கவும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!