
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது.
சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலராக தன்னைக் கூறிக் கொள்ளும் Tamim Dahri, மஹேந்திர பூபதி பெருமாள், Arun துரைசாமி ஆகியோரே அவர்களாவர் என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் இன்று உறுதிப்படுத்தினார்.
விசாரணை அறிக்கை முழுமைப் பெற்று, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த தேசிய சட்டத் துறைத் தலைவரின் ஒப்புதல் கிடைத்திருப்பதாக IGP சொன்னார்.
பொது அமைதிகைக் கெடுத்ததாகக் கூறி குற்றவியல் சட்டத்தின் கீழ் நால்வருமே வெவ்வேறு மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்ரி வினோத்தும், தமிம் டாஹ்ரியும் சட்ட நடவடிக்கைக்கு பயந்து தாய்லாந்துக்கு தப்பியோடியதாகக் கூறப்பட்ட நிலையில், ஒருவழியாக நாளை அவர்கள் நீதிமன்றத்தில் முன்னைப்படுத்தப்படவிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



