
லாசா, ஆகஸ்ட்-28- சீனாவின் திபெத் பகுதியில் நேற்றிரவு ரிக்டர் அளவையில் 5.0 ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கம் வட திபெத்தில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையமான GFZ தெரிவித்துள்ளது.
பெரும் சேதத்தை ஏற்படுத்தி நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகவும் 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போகவும் செய்த திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேப்பாளம் மற்றும் சீனாவின் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வடக்கே அந்நிலநடுக்கம் மையமிட்டிருந்தது.
இதனிடையே புதன்கிழமை திபெத்தின் Nagquவில், 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்ததாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தடுப்பு ஏரி உடைவதற்கான அபாயம் இருப்பதால், சீனா திபெத்தில் நான்காம் கட்ட வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தடுப்பு ஏரி மற்றும் மழையைக் கண்காணிக்குமாறு அந்நாட்டின் நீர்வள அமைச்சு உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே சமமயம் Gyirong பகுதிக்கு நிபுணர் குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



