
கோத்தா திங்கி , ஏப்-17- பெட்ரோனாசினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மலேசிய கச்சா எண்ணெய் கப்பலான Ocean Thunder, தற்போது மலேசிய கடல் பகுதியில் நுழைந்துள்ளதோடு அதன் இறுதி இலக்கான Pengerang-கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்களைக் கொண்ட ஈராக்கிய பஸ்ரா ஹெவி கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் இக்கப்பல் இன்றிரவு 7 மணிக்கு Pengerangகில் உள்ள ஒருங்கிணைந்த பெட்ரோலிய வளாகத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாத தொடக்கத்தில் ஈராக்கில் தொடங்கிய பெரும் சவால்கள் நிறைந்த பயணத்தைத் தொடர்ந்து இந்த விநியோகம் நடைபெறுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில், நெருக்கடிக்குள்ளான ஒரு முக்கிய போக்குவரத்து நெரிசல் பகுதியான ஹோர்முஸ் நீரிணையை அந்த எண்ணெய் கப்பல் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று கடந்தது.



