Latestஉலகம்

‘உலக அமைதியைக் கருத்தில் கொண்டு’ ஈரான் மீது உடனடி தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

வாஷிங்டன், ஆகஸ்ட்-2 – ‘உலக அமைதியைக் கருத்தில் கொண்டு’, ஈரான் மீது உடனடியாகப் புதிய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரான் மற்றும் மத்தியக் கிழக்கில் உள்ள இதர நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க, தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறிக் கொண்டார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, இந்த வாரக் கடைசியில் ஈரான் மீது கடும் தாக்குதல்களைத் தொடுக்கலாம் என முன்னதாகக் கூறப்பட்ட நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் கலந்துபேசி ட்ரம்ப் இம்முடிவுக்கு வந்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணக்கம் கண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணை உடனடியாக, முழுமையாக திறக்கப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால், ஒருவேளை அமெரிக்க நலன்களுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் வாஷிங்டன் தயாராக இருக்கும் என ஈரானுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வேளையில், மேற்காசியாவில் போர் பரவுவதைத் தவிர்க்க இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் என உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!