Latestமலேசியா

“ஒன்றுகூடும் ஒற்றுமை இந்து”: ஏப்ரல் 26-ல் கம்போங் பத்து மூடா தம்பாஹான் 1ல் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பு விழா

கோலாலாம்பூர், ஏப்ரல்-16-‘ஒன்று கூடும் ஒற்றுமை இந்து’ எனும் கருப்பொருளில், மலேசிய இந்து சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்புக் கலாச்சார நிகழ்வு வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர், கம்போங் பத்து மூடா தம்பாஹான் 1 (Kg. Batu Muda Tambahan 1) திடலில் நடைபெறும் இந்நிகழ்வு, காலை 9.00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை நீடிக்கும்.

அண்மையில் அமைக்கப்பட்ட மலேசிய இந்து சமூகம் (Pertubuhan Hindu Malaysia) என்ற அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

அவ்வமைப்பின் நோக்கம் குறித்து வணக்கம் மலேசியாவிடம் அதன் தலைவர் Dr சிவாசி ஐயாகண்ணு கூறினார்.

இவ்வமைப்பின் தொடக்க நிகழ்வு தான் இந்த ‘ஒன்று கூடும் ஒற்றுமை இந்து’.

இதில் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் கோலாட்டம், உருமி மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சிலம்பம், மஞ்சள் நீராட்டு உட்பட விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன…

இந்த நிககழ்வு அனைவருக்கும் இலவசமாகும்.

சுற்று வட்டார பல்கலைக் கழக மணவர்களுக்கும், பொது அமைப்புகள், மற்றும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிவாசி சொன்னார்.

INTERVIEW

இந்து சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், நமது கலாச்சார அம்சங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் இந்த நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு 017-9631123 அல்லது 017-9609080 என்ற எண்களில் ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!