Latestமலேசியா

கழிவறைக் குழியில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்: ஜோகூரில் கல்லூரி ஜோடி கைது

ஜோகூர் பாரு, ஜூலை.30- ஜோகூர், குளுவாங், Taman Setia Mutiaraவில் உள்ள வீட்டின் கழிவறைக் குழியில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் 19 வயதுடைய இரு கல்லூரி மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்மையில் பிரசவித்திருக்கலாம் என நம்பப்படும் மாணவி ஒருவர் Enche Besar Hajjah Kalsom மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து மாவட்டக் காவல் தலைமையகத்திற்குத் தகவல் கிடைத்ததாக ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் செல்ல அம்மாணவி முன்னதாக தனது ஆசிரியரைத் தொடர்பு கொண்டுள்ளார். மருத்துவப் பரிசோதனையில், அந்த மாணவி ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்ததும், மற்றொரு பெண் குழந்தை இன்னும் பிரசவமாகாமல் இருந்ததும் தெரிய வந்தது.

அம்மாணவி வாடகைக்கு வசித்து வந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெண் குழந்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக Ab Rahaman விவரித்தார்.

இறந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனினும் இறப்புக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
விசாரணைக்கு உதவும் வகையில் அம்மாணவியின் காதலர் எனக் கருதப்படும் 19 வயதுடைய மாணவரும் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு இன்று Kluang மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என Ab Rahaman மேலும் சொன்னார்.

கொலைக்கு எதிரான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302, பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்தல் அல்லது பறிக்க முயலுதல் தொடர்பான பிரிவு 315 ஆகியவற்றின் கீழ் அவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!