
கூலாய், டிசம்பர்-7,ஜோகூர் கூலாய், தாமான் மாஸில் தனியார் நடத்தி வரும் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் கற்பழிப்புப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அம்மையத்தின் பாதுகாவலர் ஒருவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.
17 வயது மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், 59 வயது அவ்வாடவர் கைதானதாக, கூலாய் போலீஸ் தலைவர் துணை ஆணையர் தான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார்.
2020 முதல் 2022 வரை, அப்பெண்ணுக்கு 13 முதல் 15 வயதிருக்கும் போது அந்த உள்ளூர் ஆடவரால் அவள் கற்பழிக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
விசாரணைக்காக, சந்தேக நபர் 10 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.