
சுங்கை பட்டாணி – ஜூலை-6 – கெடா, சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரின் மனைவி கைதாகியுள்ளார். 20 வயது மதிக்கத்தக்க அப்பெண், சம்பவ இடத்திற்கு அருகே அவர்கள் வசித்து வந்த வாடகை வீட்டில் கைதுச் செய்யப்பட்டார்.
வீட்டில் சோதனை நடத்தியதில் ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக, குவாலா மூடா போலீஸ் தலைவர் Hanyan Ramlan தெரிவித்தார். இதையடுத்து அப்பெண் இன்று முதல் ஜூலை 12 வரை விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
34 வயது அவ்வாடவர் முன்னதாக பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்றிரவு 7.50 மணிக்கு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
நேற்று காலை ஜித்ராவில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவருக்கும் இந்த சந்தேக நபருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது.
இவர்கள், 2022 முதல் பல்வேறு மாநிலங்களில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.