
சென்னை, ஏப்ரல்-29-இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட AG. பேரறிவாளன் வழக்கறிஞராகியுள்ளார்.
இதன் மூலம் 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு, இன்று ஒரு புதிய வரலாறு தொடங்குகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் சிறைக்குச் சென்றவர் இவர்; 2022-ஆம் ஆண்டு விடுதலையானார்.
உடல் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவரது சிந்தனையை எவராலும் சிறைபிடிக்க முடியவில்லை.
இது வெறும் விடுதலையைப் பற்றிய கதை அல்ல; மாறாக, அசாத்தியமான மன உறுதியைப் பற்றிய பாடம்.
தன்னை முடக்கிய அதே சட்டத்தை அவர் ஆயுதமாக்கினார்; சிறையிலிருந்தபடியே பல பட்டங்களைப் பெற்று, இன்று ஒரு மாபெரும் உயரத்தைத் தொட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர், நேற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவுச் செய்துள்ளார்.
காலம் எவ்வளவு சோதனைகளைத் தந்தாலும், விடாமுயற்சி இருந்தால் விடியல் நிச்சயம் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.
பேரறிவாளன்…மனத்தின் வலிமைக்கு ஒரு வலுவான உதாரணம்!



