
செப்பாங், மே 7-இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வர்த்தக நோக்கங்களுக்காக அருவருப்பான மற்றும் ஆபாசமான காணொளிகளை அனுப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பலகார விற்பனையாளர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 30,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
24 வயதான பிரான்லி முகமட் தஹார்( Branley Mohd Tahar ) என்ற நபருக்கு நீதிபதி அகமட் புவாட் ஒத்மான் இந்த தண்டனையை விதித்தார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி Branley விற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வணிக நோக்கங்களுக்காக ஆபாசமான காணொளிகளைக் கொண்ட ஒரு டெலிகிராம் குழுவிற்கு அணுகலை வழங்க, டெலிகிராம் செயலியைத் தெரிந்தே பயன்படுத்தியதாக Branley மீது குற்றம் சாட்டப்பட்டது.
MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் ஒரு ரகசிய முகவருக்கு, டெலிகிராம் கணக்கு வழியாக 150 ரிங்கிட் கட்டணத்தில் அந்த உள்ளடக்கத்தை 2024 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம்தேதி விற்றதாக Branley மீது குற்றம் சாட்டப்பட்டது.



