
2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில், அமெரிக்க வீரர் Florin Balogun-னின் சிவப்பு அட்டைத் தடையை FIFA அமைப்பு ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் Donald Trump, FIFA தலைவர் Gianni Infantinoவிடம் பேசிய பிறகே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அணி ஆட்டக்காரரான 25 வயது Balogun, Bosnia and Herzegovinaவுக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணி வீரரின் கணுக்காலை மிதித்ததற்காக 64-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால் அவருக்கு ஆட்டத் தடை விதிக்கப்பட்டது. இதுவரை 3 கோல்கள் அடித்துள்ள Balogun-னுக்கு விதிக்கப்பட்ட அத்தடையை நீக்கக் கோரி, அதிபர் Trump, FIFA தலைவருக்குத் தொடர்ந்து 3 முறை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, Balogun-னின் தடையை நிறுத்தி வைப்பதாக FIFA அறிவித்தது. இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து Trump, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே FIFA அமைப்பின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவுக்கு பெல்ஜியம் கால்பந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்து knockout சுற்றில் அமெரிக்காவுடன் களமிறகும் நிலையில் பெல்ஜியத்திற்கு அம்முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.



