Latestமலேசியா

சிங்கப்பூர் நாட்டவரைக் கடத்தி, 63,000 ரிங்கிட் பிணைத் தொகை கோரியதாக ஆறு பேர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.21-சிங்கப்பூர் ஆடவர் ஒருவரைக் கடத்தி, 63,000 ஆயிரம் ரிங்கிட் பிணைத் தொகை கோரியதாக பெண் ஒருவர் உட்பட அறுவர் மீது ஜோகூர் பாரு Sessions நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

அவர்கள் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி Skudai, Jalan Orkid, எண் 22-இல் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன் Al-Shameer Abdul Nassar என்பவரைக் கடத்தி 20,000 சிங்கப்பூர் டாலர் அதாவது 63,000 ரிங்கிட் பிணைத் தொகை கோரியதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பெண் வேலையில்லாதவர் என்றும், 1 முதல் 22 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளைக் கொண்டவர் என்றும் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதேவேளை, வழக்குரைஞர் எவரும் இல்லாத மற்ற ஐவர் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைக் காரணம் காட்டி ஜாமீன் கோரினர்.

இவ்வேளையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் சிறை வைக்கும் நோக்கில் அவரை கூட்டாகக் கடத்தியது தொடர்பில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அந்த அறுவரும் மறுத்தனர்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி Skudai, Jalan Amanனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் அக்குற்றத்தைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மற்றொரு நிலவரத்தில், கடத்தப்பட்ட சிங்கப்பூர் பெண்ணுக்குச் சொந்தமான தங்கச் சங்கிலி மற்றும் Rolex கடிகாரத்தைப் பறித்ததாகக் கூறப்படும் கூட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் மூவர் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர். குற்றம் நிரூபணமானால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இறுதியில் பெண் மற்றும் இரு ஆவர்களுக்கு வர்களுக்க தலா 60,000 ரிங்கிட் ஜாமீன் தொகையையும், மீதம் மூவருக்கு உள்ளூர் ஜாமீன்தாரர்களுடன் தலா 69,000 ரிங்கிட் ஜாமீன் தொகையையும் நீதிமன்றம் அனுமதித்தது. அதோடு கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அவ்வழக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கத்தியால் தாக்கி ஆண் ஒருவருக்குத் காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவருக்கு ஆகியோருக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!