Latestமலேசியா

சிறகை விரிக்கும் India Gate: சங்காட் புக்கிட் பிந்தாங்கில் 14-ஆவது கிளை பிரம்மாண்டத் திறப்பு

கோலாலம்பூர், ஜூன்-13-இரம்மியமானச் சூழலுக்கும், நாவூறும் சுவையான பாரம்பரிய உணவுகளுக்கும் பெயர்ப் பெற்ற India Gate உணவைகம் தனது 14-ஆவது புதிய கிளையைக் கோலாலம்பூரின் முக்கிய மையப்பகுதியான சங்காட் புக்கிட் பிந்தாங்கில் (Changkat Bukit Bintang) நேற்று வெள்ளிக்கிழமை மிக விமரிசையாகத் திறந்துள்ளது.

​இந்த பிரம்மாண்டத் திறப்பு விழாவில் திரளான வாடிக்கையாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.

இந்தச் சிறப்பான தருணத்தில்
​புதிய கிளையின் இலக்கு மற்றும் தங்களின் தரம் குறித்து India Gate நிர்வாக இயக்குனர் சரவணன் சுப்பிரமணியம் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.

அண்மையக் காலமாக வணிக வளாகங்களுக்குள் கிளைகளைத் திறப்பதில் மும்முரம் காட்டி வந்த நிலையில், இந்த 14-ஆவது கிளையை Changkat Bukit Bintang-கில் திறப்பதற்கான காரணத்தை சரவணன் விளக்கினார்…

India Gate-சின் அனைத்து கிளைகளுக்கும் ஹலால் சான்றிதழ்களைப் பெற முயற்சி நடைபெறும் நிலையில், ஹலால் சான்றிதழின் முக்கியத்துவம் குளித்தும் சரவணன் விளக்கினார்.

கடைத் திறப்பு விழாவை ஒட்டி 2,000 பிரியாணி பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், ஏராளமான வெளிநாட்டவர்கள் அவற்றை வாங்கிச் சென்றதைப் பார்க்கவே மனநிறைவாக இருந்ததாக அவர் சொன்னார்.

அடுத்து, இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 3 கிளை உணவங்களைத் திறக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

​உணவகத்தின் தனித்துவமான சுவை மற்றும் உபசரிப்பு குறித்து அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டவர் மனங்களிலும் India Gate இடம்பிடித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!