Latestமலேசியா

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர், உடற்பயிற்சிப் பயிற்றுநர் மீது குற்றச்சாட்டு

மூவார், அக்டோபர் 26 – ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தனிப்பயிற்சி ஆசிரியர் மீதும், தனது மகளின் 10 வயது தோழிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்பயிற்சிப் பயிற்றுநர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருவரும் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட தலா மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்தனர்.

பத்து பஹாட்டில் உள்ள தனிப்பயிற்சி மையத்தில் இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீதும், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டில் மகளின் தோழிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்பயிற்சிப் பயிற்றுநர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றம் ஆசிரியருக்கு 10,000 ரிங்கிட்டும், உடற்பயிற்சிப் பயிற்றுநருக்கு 12,000 ரிங்கிட்டும் பிணை வழங்க அனுமதித்தது. இருவரும் பிணைத் தொகையைச் செலுத்தினர். ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் வழக்கறிஞரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும் உடற்பயிற்சிப் பயிற்றுநரின் வழக்கு நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!