
ஷா ஆலாம், நவம்பர்-1-சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களுக்கு Influenza A தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் அரியணை அமர்ந்த வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய முக்கிய நிகழ்ச்சிகள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சுல்தானுக்கு காய்ச்சல் மற்றும் சோர்வு ஏற்பட்டதை அடுத்து, அரச மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் இந்தத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் முழுமையாக நலம் பெறும் வரை, அடுத்த 5 முதல் 7 நாட்களுக்குப் பொது மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, இன்று நடைபெறவிருந்த Istiadat Menjunjung Duli மற்றும் மாநில விருது வழங்கும் விழா ஆகியவை எதிர்வரும் நவம்பர் ஏழாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
சுல்தான் ஷாராஃபுடின் விரைவில் நலம் பெற பொது மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அரண்மனை கேட்டுக் கொண்டுள்ளது.



