Latestமலேசியா

செப்பாங்கில் பெண் வியாபாரியை காலணியால் இருமுறை தாக்கினாரா ஆடவர்? வைரலாகும் காணொளி!

செப்பாங், அக்டோபர் 31 –சிலாங்கூர், செப்பாங் மாவட்டத்தின் சுங்கை பீலேக்கில் உள்ள வாழைப்பழப் பொரியல் கடையில், பெண் வியாபாரி ஒருவரை ஆடவர் ஒருவர் காலணியால் இருமுறை தாக்கியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாடிக்கையாளராக வந்ததாகக் கூறப்படும் அந்த ஆடவர், பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரெனத் தனது காலணியைக் கழற்றி அவரது தலையில் இருமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவர்களுக்கிடையே என்ன உரையாடல் நடந்தது, தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!