Latestஉலகம்

ஜெய்ப்பூரில் 17 கோடி திருமண ஏற்பாடு; நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை மலையிலிருந்து தள்ளி கொன்ற கொடூரப் பெண்

ஜெய்ப்பூர், ஜூன்-24-இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 17 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரண்மனை திருமணம்…

ஆனால், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை, பெண்ணே மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் புனேவில் அரங்கேறியுள்ளது.

26 வயது இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் (Ketan Agarwal).

இவருக்கும், சியா கோயல் (Siya Goyal) என்ற பெண்ணுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

இதற்காக ஜெய்ப்பூரில் 17 கோடி ரூபாயில் அரண்மனை மற்றும் இரண்டு தனி இரக விமானங்கள் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

​இந்நிலையில் ஜூன் 18-ஆம் தேதி, சியாவின் பிறந்தநாளைக் கொண்டாட இருவரும் Lohagard எனும் மலைக் கோட்டைக்கு சென்றுள்ளனர்.

அங்கு புகைப்படம் எடுக்கும்போது கேதன் தவறி விழுந்துவிட்டதாக சியா நாடகமாடியுள்ளார்.

​ஆனால், கேதனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.

​போலீஸார், CCTV மற்றும் கைப்பேசி ஆதாரங்களைத் தீவிரமாக விசாரித்ததில், சியாவுக்கு சேத்தன் சவுத்ரி (Chetan Chaushry) என்ற இரகசிய காதலன் இருந்தது தெரியவந்தது.

காதலுக்கு இடையூறாக இருந்த கேதனை, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சியாவும் அவரது காதலனும் திட்டமிட்டு மலைய உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலைச் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதிர்ந்துபோன போலீஸார் கொடூர காதலர்கள் இருவரையும் கைதுச் செய்து, துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!