Latestமலேசியா

வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ: 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர்

ஹூஸ்டன், ஜூன்-24-அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

அதில் போர்ச்சுகல் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 6 மற்றும் 39-வது நிமிடங்களில் அதிரடியாக இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் 6 வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதியச் உலக சாதனையை 41 வயது ரொனால்டோ படைத்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் முதன் முறையாகப் பங்கேற்ற ரொனால்டோ, பின்னர் 2010, 2014, 2018, 2022 மற்றும் இந்த 2026 வரை ஒவ்வொரு உலகக் கிண்ண இறுதிச் சுற்றிலும் கோலடித்துள்ளார்.

தவிர, உலகக் கிண்ண வரலாற்றில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்களை அதாவது 10 கோல்கள் அடித்து, மறைந்த சகாப்தம் Eusebio-வின் 9 கோல்கள் சாதனையை முறியடித்து ரொனால்டோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

“விமர்சனங்களுக்குப் பிறகு நான் மீண்டும் களத்திற்குத் திரும்பியுள்ளேன்” என ஆட்டத்தின் முடிவில் ரொனால்டோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இரசிகர்களால் GOAT என அழைக்கப்படும் ரொனால்டோவின் இச்சாதனை சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!