Latest
ஜெலியில் ஆற்றில் தங்கம் எடுக்கும் போது மண் சரிவு ; இருவர் உயிரிழப்பு

ஜெலி, மே-21-கிளந்தான் ஜெலியில், ஆற்றில் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண் சரிவில் சிக்கி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு சுமார் 8 மணிக்கு Ladang Sawit Jerimbong ஆற்றில் நிகழ்ந்தது.
மண் மேடு சுமார் 2 மீட்டர் உயரத்தில் சரிந்து விழுந்ததால், இரு ஆடவர்களும் மண்ணில் புதைந்துள்ளனர்.
தீயணைப்பு – மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, 9 பேர் கொண்ட குழு
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
ஆனால், சம்பவ இடத்திற்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும் சவாலாகவும் இருந்ததால், மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவழியாக பின்னர் மீட்கப்பட்டபோதும், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
இச்சம்பவத்தில்,மற்றொரு நபர் உயிர் தப்பினார்.



