
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், கெடா, பினாங்கு ஆகிய 5 மாநிலங்களை இது உட்படுத்தியுள்ளது. Datuk TS Azizee Ismail பினாங்கு போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Datuk Shazeli Kahar, சிலாங்கூர் போலீஸ் தலைவராகிறார். புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுத் துறையின் இயக்குநராக பதவி உயர்வுப் பெற்றுள்ள Datuk Hussein Omar Khan இடத்தை அவர் நிரப்புகிறார்.
கெடா போலீஸ் துணைத் தலைவர் Datuk Adzli Abu Shah அம்மாநிலத்தின் புதியப் போலீஸ் தலைவராகிறார்.
புக்கிட் அமானைச் சேர்ந்த Ab Rahaman Arsad, ஜோகூர் போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்கிறார். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநராக பதவி உயர்வுப் பெறும் டத்தோ எம். குமாருக்கு பதிலாக அவர் பொறுப்பேற்கிறார்.
இவ்வேளையில், பல்வேறு பொறுப்புகளை உட்படுத்திய மேலும் 18 பதவி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அமுலுக்கு வருமென, அரச மலேசியப் போலீஸ் படையின் செயலாளர் Datuk Kamaruzaman Abdullah தெரிவித்தார்.