Latestமலேசியா

ஜோகூர் தேர்தல்: மச்சாப்பில் மீண்டும் களமிறங்கும் ஒன் ஹபீஸ்; 4 தொகுதிகளில் ம.இ.கா. வேட்பாளர்கள் அறிவிப்பு

ஜோகூர், ஜூன் 24 – ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை மாநிலத் தலைவர் மற்றும் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi இன்று அறிவித்தார். இதில், அவர் தாம் தற்போது பிரதிநிதிக்கும் Machap தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

ம.இ.கா. சார்பில் நான்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களில், Raven Kumar Krishnasamy கெமேலா (Kemelah) தொகுதி, ருகேந்திரன் வெள்ளையன் -காஹாங் (Kahang), பன்னீர்செல்வம் – பெர்லிங் (Perling), மற்றும் குமரன் ராமகிருஷ்ணன் -புக்கிட் பத்து (Bukit Batu) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனது ஆடையைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அனுபவமும் புதிய முகங்களும் கலந்த அணியை களமிறக்கியுள்ளது.

வரும் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!