Latestமலேசியா

ஜோகூர் பாரு சுத்ரா மாலில் களைகட்டும் Colours of India-வின் தென்கிழக்காசிய தீபாவளி திருவிழா மற்றும் வர்த்தகக் கண்காட்சி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜோகூர் பாருவில் உள்ள சுத்ரா மால் பேரங்காடியில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய தீபாவளி திருவிழா மற்றும் வர்த்தகக் கண்காட்சி, பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

இக்கண்காட்சியின் சிறப்பு அங்கமாக, இன்று வணக்கம் மலேசியா மற்றும் Colours of India இணைந்து நடத்தும் ‘ஒளிரட்டும் ஒற்றுமை தீபாவளி’ நிகழ்ச்சியில், Psycho Mantra, A.G. பரஞ்ஜோதி, MC Raj உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Colours of India ஏற்பாட்டில் ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில், மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

சுத்ரா மாலின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 250-க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய ஆடைகள், ஆபரணங்கள், பூஜைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சிறப்புத் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர, நான்காவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடாரங்களும் வருகையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

கண்காட்சி குறித்து அதன் ஏற்பாட்டாளரும் Colours of India தலைமைச் செயலதிகாரியுமான மோகன செல்வி ரவீந்திரன், வணக்கம் மலேசியாவிடம் இவ்வாறு தெரிவித்தார்…

தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கான வாய்ப்பை இக்கண்காட்சி வழங்கியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பொருட்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களின் வருகை உற்சாகமளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

விற்பனை மட்டுமின்றி, பல்வேறு கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இந்தத் தீபாவளிக் கண்காட்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்துள்ளன.

கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்களும் உள்ளூர் கலைஞர்களும் கலந்து கொண்டு வருகையாளர்களை மகிழ்வித்தனர்.

தீபாவளிப் பொருட்களை முன்கூட்டியே வாங்குவதற்கும் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பதற்கும் இக்கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமைந்திருப்பதாக வருகையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

நாளை அக்டோபர் 11-ஆம் தேதி, செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சருமான R. யுனேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!