Latestமலேசியா

போலீஸாரிடமிருந்து தப்பியோடி பொதுமக்களின் வாகனங்கள் மீது மோதிய ஆடவர்; துப்பாக்கிச் சூட்டில் காயம்

சுங்கை பூலோ, அக்டோபர்-10,

பெட்டாலிங் ஜெயாவில் போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற ஆடவர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 6.42 மணியளவில், Persiaran Mahogani-யிலிருந்து சுங்கை பூலோ நோக்கிச் செல்லும் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர், போலீஸ் ரோந்து வாகனம் தம்மைத் துரத்தியபோது, தனது Perodua Wira காரை மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, பொது மக்களின் வாகனங்களையும் அவர் மோதியதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த ஆடவர், பின்னர் கைதுச் செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் போலீஸ் ரோந்து அதிகாரிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shamsudin Mamat தெரிவித்தார்.

சந்தேக நபர் இன்று முதல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அவ்வாடவரின் காரைத் துரத்திக் கொண்டு போலீஸார் சாலையில் ஓடியக் காட்சிகள் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!