Latestமலேசியா

RM10 பந்தயத்தில் RM2.1 மில்லியன் Magnum 4D ஜாக்பாட் வென்ற கிள்ளானைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆடவர்

கோலாலம்பூர், அக்டோபர்-10,

வெறும் 10 ரிங்கிட் செலவில் Magnum 4D அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்ற கிள்ளானைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஆடவர் ஒருவர், 2.1 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற Magnum 4D Jackpot குலுக்கலில், அவர் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் 6301 மற்றும் 2001 ஆகிய எண்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு அந்தப் பரிசுத் தொகை விழுந்துள்ளது.

mSystem-10 முறையில் பங்கேற்ற அந்த ஆடவர், தாம் இவ்வளவு பெரிய தொகையை வெல்வோம் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

தமது வெற்றிக்குப் பிறகு முதலில் நினைவுக்கு வந்தவர் மனைவிதான் எனக் கூறிய அவர், பரிசுத் தொகை முழுவதையும் மனைவியிடம் வழங்க விரும்புவதாகக் கூறினார்.

குடும்பச் செலவுகளை இதுவரை மனைவியே கவனித்து வந்ததாகவும், இந்தப் பணத்தின் மூலம் இருவரும் தங்களது ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, Magnum 4D Jackpot-ன் மொத்தப் பரிசுத் தொகை தற்போது 20 மில்லியன் ரிங்கிட்டை நெருங்கி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!