Latestமலேசியா

நாட்டில் நிலவும் புகைமூட்டம்: ஆஸ்துமா பாதிப்பு 259%, சுவாசத் தொற்றுகள் 124% அதிகரிப்பு

குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட்-24-நாட்டில் நிலவும் புகைமூட்ட சூழல் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்துமா பாதிப்பு 259 விழுக்காடும், மேல் சுவாசக் குழாய் தொற்றுப் பாதிப்பு 124 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

​சுவாசப் பிரச்சனை தொடர்பான சம்பவங்கள் ஆயிரத்து 637-லிருந்து 3 ஆயிரத்து 674-காகவும், ஆஸ்துமா பாதிப்புகள் 61-லிருந்து 219-தாகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

​அதேவேளையில், சரவாக்கின் 5 பகுதிகள், கெடாவின் சுங்கை பட்டாணி மற்றும் பேராக்கில் தைப்பிங் ஆகிய 7 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

​வெப்ப அலை மற்றும் புகைமூட்டம் நீடிப்பதால், பொது மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!