Latestமலேசியா

பகாங்கில் பிக்கப் வாகனத்தின் மீது மரம் விழுந்தது – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

பகாங், ஆகஸ்ட் 3 – பகாங் ஜண்டா பாயிக்–பெந்தோங் சாலையில் இன்று மதியம் சாலையோர மரம் ஒன்று பிக்கப் வாகனத்தின் மீது சரிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மதியம் 1 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்தனர். மேலும், சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து பொதுமக்களால் மீட்கப்பட்டு பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வாகனத்தில் சிக்கியிருந்த நால்வரின் உடல்களை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!