Latestமலேசியா

பண்டார் உத்தாமா பள்ளி கொலை வழக்கு: கொலையுண்ட மாணவிக்கு 180 கத்திக்குத்து, வெட்டுக்காயங்கள் – நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-4-சிலாங்கூர், பண்டார் உத்தாமா டாமான்சாரா பள்ளி மாணவி கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணையில் அதிரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

​கடந்த அக்டோபர் மாதம் பள்ளியின் கழிப்பறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட 16 வயதான Yap Shing Xuen, சுமார் 180 கத்திக்குத்து மற்றும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இந்தத் தாக்குதலின் போது அவரின் முக்கிய உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு விசாரணையின் முதல் நாளான நேற்று, மருத்துவ நிபுணர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

​இச்சம்பவம் நடந்தபோது 14 வயதாக இருந்த குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் மீது, குற்றவியல் சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

​நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ​அரசுத் தரப்பு மேலும் பல முக்கிய சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!